13
அக்
08

கடைசி மழைத்துளி..

***

அகதி முகாம்
மழையில் வருகிறது

மண் மணம்.

 

***

அவசரக் காற்று
முதல் மழை
புளியம் பூக்கள்.

 

***


மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில்
முகம் பார்த்தது
தெருவிளக்கு.


***


விற்பனையில்
வண்ணத்துப் பூச்சி
துடிக்கிறது பூச்செடி.


***


தாய்க்காகக் காத்திருக்கிறேன்
மரத்தில் சாய்ந்தபடி.

 

***


இறந்த வீரன்
மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது
பாதி எழுதிய மடல்.

 

***

விடிந்துவிடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா.

 

***

வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை.

 

***


எப்படிப் பாதுகாக்க
குடைக் கம்பியில்
உன் கைரேகை.

 

***

தொட்ட நினைவு
புரட்டிய பக்கத்தில்
கூந்தல் முடி.

 

***


பாவம் தூண்டில்காரன்
தக்கையின் மீது
தும்பி.

 

***


மரக்கிளையில் குழந்தை
வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்.

 

***


வாழ்க்கை என்னடா வாழ்க்கை
கருவேலங் காட்டிற்குள்
வண்ணத்துப் பூச்சி!


***


எவன் நிலம்!
எவன் நாடு!
இலவச மனைப் பட்டா!

 

***


நந்தனைக் கொன்றதே சரி
குலதெய்வம் மறந்த
குற்றவாளி.

 

***


நொறுக்குவான் பண்ணையாரை
எல்லாக் கோபங்களோடும்
சுடுகாட்டில்.

 

***

பிணப் பரிசோதனை
அய்யர் குடலிலும்
மலம்.


***


தேவர் படித்துறை
பறையர் படித்துறை
அலைகள் மீறின
சாதி!


***


பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.

 

***


ஊருக்கு ஊர் வட்டிக்கடை
பொது இடங்களில்
தண்ணீர்த் தொட்டி
காறித்துப்புகிறான்
கணைக்கால் இரும்பொறை.

 

***


குருட்டுப் பாடகன்
தொடர்வண்டி சக்கரத்தில்
நசுங்கியது
புல்லாங்குழல்.

 

***


அன்று அதனை அடித்தாள்
இன்று அதுவாகி வெடித்தாள்
தாய் வழிச் சமூகம்.

 

***


ஒரே தலையணை
வெண்சுருட்டுப்
புகைக்குள்
திணறும்
மல்லிகை மணம்.

 

***


இரண்டு அடி கொடுத்தால்தான்
திருந்துவாய்!
வாங்கிக்கொள்
வள்ளுவனிடம்.

 

***


எங்கு தூங்குகிறதோ
என் கால்சட்டை காலத்தின்
குத்துப்படாத பம்பரம்.

 

***


கல்லூரி மணிக்கூண்டு
பழைய மாணவன்
விசாரிக்கும் மணியோசை.

 

***


ஒரு மரத்தை வெட்டுபவன்
மழையைக்
கொலை செய்கிறான்

 

***


கண்ணில் ஓவியம்
காதில் இசை
மழைப் பாட்டு

 

***


இந்தியா டுடேயில்
தமிழச்சி மார்புகள்!
கண்ணீரால் போர்த்தினேன்.

 

***


இரண்டு ஊதுபத்தி
புகையின் அசைவில்
நீ… நான்

 

***


உளி எடுத்துச்
சிற்பம் செதுக்கியவன்,
மூங்கில் அறுத்துப்
புல்லாங்குழல் செய்தவன்,
ஒலை கிழித்துக்
கவிதை எழுதியவன்..
இவர்களுக்கும்
பங்குண்டு
மழைக் கொலையில்.

ஒவ்வொரு செடிக்கும்
ஒவ்வொரு கொடிக்கும்
ஒவ்வொரு மரத்திற்கும்
பெயர்ச்சொல்லி,
உறவு சொல்லி
வாழ்ந்த வாழ்க்கை
வற்றிவிட்டது


12 மறுவினைகள் to “கடைசி மழைத்துளி..”


  1. 6:46 முப இல் ஒக்ரோபர் 14, 2008

    என்ன சொல்லி என் மகிழ்வைப் புரியவைக்கவெனத் தெரியவில்லை!

    பகிர்தலுக்கு நன்றி.

    இந்தப் புத்தகத்தையும் பொக்கிஷமாய் வைத்திருக்கிறேன்!

  2. 3:58 முப இல் ஒக்ரோபர் 15, 2008

    //
    எப்படிப் பாதுகாக்க
    குடைக் கம்பியில்
    உன் கைரேகை.//
    அற்புதம்! தொடர்ந்து எழுதுங்கள்!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்!

  3. 3 uumm
    8:36 முப இல் ஒக்ரோபர் 15, 2008

    வணக்கமும்..அன்பும்..
    அறிவுமதி..அவர்களுக்கு…உங்களையும்..உங்கள்..கவிதைகளையும்…என்..நண்பன்..பொன்.சுதா..மூலம்..அறிவேன். என்றாலும்..இதுவே..முதல்முறை…உங்களின்..தொடர்பிற்க்கு….கவிதைகள்…அனைத்தும்..அருமை…

    அதிலும்..

    “இரண்டடி.கொடுத்தால்தான்..
    திருந்துவாய்..
    வாங்கிக்கொள்..
    வள்ளுவனிடம்..”…படித்ததும்..சிரித்தேன்..மகிழ்ந்தேன்…
    “உமாவும்..கவிதையும்..”என்ற..தளத்தில்…சில..மாதங்களாக…கவிதைகள்..எழுதிக்கொண்டிருக்கிறேன்.தாங்கள்…முடிந்தால்…அவற்றைப்படித்து…தங்களின்..மேலான.கருத்துக்களை…வழங்க….விரும்புகிறேன்.அதன் மூலம்..என் கவிதைகளின்..தரத்தை..அறிய …ஆசைப்படுகிறேன்..எனவே..

    http://www.uumm.wordpress.com என்ற…என் கவிதை தளத்திற்க்கு..உங்களை..அன்புடன்..அழைக்கிறேன்..நன்றி.

  4. 7:30 பிப இல் நவம்பர் 5, 2008

    //பிணப் பரிசோதனை
    அய்யர் குடலிலும்
    மலம்//
    அருமை அருமை அறிவுமதி அவர்களே…
    கவிதை என்னும் மழையில்
    நனைய வைத்தமைக்கு

  5. 5 இராகவன், நைஜிரியா
    7:34 பிப இல் நவம்பர் 5, 2008

    // ஒரு மரத்தை வெட்டுபவன்
    மழையைக்
    கொலை செய்கிறான் //

    இயற்கையை பாதுகாக்காவிடில் அழிவு ஏற்படும் என்பதை எவ்வளவு அழகாக சொல்லியுள்ளீர்கள். Keep it up.
    இராகவன், நைஜிரியா

  6. 5:34 முப இல் நவம்பர் 6, 2008

    என்ன சொல்வது என்று தெரியவில்லை.. இவை அனைத்துமே கவிதைகள் என்பதை விட,உண்மையான உணர்ச்சியின் வரி வடிவங்கள் என்றே சொல்வேன்..
    உங்கள் தமிழ் பற்றின்,தமிழ் உணர்வுகளின் ரசிகன் நான்.இலங்கையில் உங்களை கம்பன் விழாவில் சந்தித்துள்ளேன்..

  7. 7 யாழ்_அகத்தியன்
    10:14 முப இல் நவம்பர் 8, 2008

    இரண்டு ஊதுபத்தி
    புகையின் அசைவில்
    நீ… நான்

    அனைத்தும்..அருமை…

  8. 2:48 பிப இல் நவம்பர் 8, 2008

    //ஒரு மரத்தை வெட்டுபவன்
    மழையைக்
    கொலை செய்கிறான் //

    மழைக் கொலையா???
    இனி மரம் வெட்டுபவன் எல்லாம் என் எதிரி..
    அன்புடன் அருணா

  9. 9 கோ.மணிவர்மா
    5:58 முப இல் நவம்பர் 12, 2008

    பறையர் சுடுகாடு
    படையாட்சி சுடுகாடு
    தலைமுழுக
    ஒரே ஆறு.
    சாதியத்தை இதை விட பிறகு
    எப்படி செல்லமுடியம்.
    கவிஞரின் தொழில் கவிதை மட்டுமல்ல.
    போராட்டத்திற்கு தலைமை ஏற்க்கவும் வேண்டும்.
    உங்கள் எழுத்து இதை செய்கிறது.

    மணிவர்மா

    http://www.komanivarma.blogspot.com/

  10. 3:56 முப இல் ஜனவரி 1, 2009

    அற்புதம். படித்தேன். மகிழ்ந்தேன். நெகிழ்ந்தேன்.

    நிறைய எழுதுங்கள்..

    வாழ்த்துக்கள்

  11. 8:11 முப இல் ஜனவரி 19, 2009

    Greetings! Please continue your services! I was happy to meet you on sept 2007 in Chennai!

  12. 1:13 பிப இல் பிப்ரவரி 25, 2009

    //ஒவ்வொரு செடிக்கும்
    ஒவ்வொரு கொடிக்கும்
    ஒவ்வொரு மரத்திற்கும்
    பெயர்ச்சொல்லி,
    உறவு சொல்லி
    வாழ்ந்த வாழ்க்கை
    வற்றிவிட்டது//

    அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்!

    முதல் முறையாய் வாசிக்கிறேன்
    உங்கள் கவிதை வரிகளை!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


பக்கங்கள்

Blog Stats

  • 96,005 hits

%d bloggers like this: