அன்புள்ள ஞாநிக்கு…
… அறிவுமதி…..
.
அன்புள்ள ஞாநி! உங்கள் பழைய நண்பன் அறிவுமதி பேசுகிறேன். அவ்வப்போது நீங்கள் செய்கிற தவறுகளை அவ்வப்போது நட்புரீதியாகவே சுட்டிக்காட்டி இப்படியெல்லாம் எழுதுதல் நாகரிகமா? நியாயமா? என்று நேரிடையாகவே தங்களிடம் கேட்டிருக்கிறேன்.
இனி அப்படியெல்லாம் எழுதமாட்டேன் என்று எனக்கு நீங்கள் சில வேளைகளில் உறுதிமொழியும் அளித்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையில் உங்களோடு உடன்பட்டு உங்கள் எழுத்துகளை உள்வாங்கி உளம் மகிழ்ந்த எங்களுக்கு…
கொஞ்சகாலமாகவே… உங்கள் எழுத்துகளில் தென்படத் தொடங்கிய ‘நொரநொரப்பு’ உங்கள் சிந்தனைகளை உள்விழுங்க விடாமல் உபத்தரவம் செய்யத் தொடங்கியது.
அப்போதே… விழித்துக் கொண்டு உங்கள் எழுத்துகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினோம்…
சிவப்புடை போட்டுக் கொண்டு
பொதுவுடைமை முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டு
அவர்களிடம் பிடிபடாமல்
தப்பித்து வந்த நீங்கள்…
கருப்புடை போட்டுக் கொண்டு
பெரியாரிய முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டு
அவர்களிடம் பிடிபடாமல்
தப்பித்து வந்த நீங்கள்…
புலிகளின் சீருடை போட்டுக்கொண்டு
புலிகளின் முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டுத்
திரும்புகையில் பிடிபட்ட
ஒரு
கேடு கெட்ட
சிங்கள உளவாளியாய்
இப்போது எங்களிடம் நீங்கள்
கையும் களவுமாய்..
பொய்யும் பூணூலுமாய்..
அகப்பட்டிருக்கிறீர்கள்…
கொஞ்ச நாள்களுக்கு முன்பு உங்களிடமும் உங்கள் எழுத்துகளிடமும் கொஞ்சம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு… இப்படியெல்லாம் ஞாநியை சந்தேகப்படலாமா? என்று கேட்டு… என் கருத்துக்கு உடன்படாமல் உங்கள் பக்கம் நின்றவர்தான் எங்கள் சுப.வீ.
தமிழ்த்தேசீய ‘தென்செய்தி’-யும் எங்கள் ஞாநி என்று தங்கள் கட்டுரையை அண்மையில் வெளியிட்டு மகிழ்ந்தது.
பெரியார் திராவிடர் கழகமும், எங்கள் ஞாநி.. பெரியார் ஞாநி என்று.. பல மேடைகள் தந்து மகிழ்ந்தது.
ஆனால்… இவர்கள் அனைவரிடமும்.. சுப.வீ-க்கு தாங்கள் எழுதிய குமுதம் மடல்வாயிலாக…
நான்..
பெரியார் ஞாநியன்று..
பெரியவாள் ஞாநியே..
என்று வெளிப்படையாகத் தெரிவித்துக் கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி ஞாநி. திண்ணியத்திலும் எரையூரிலும் ஆதிக்க சாதிகள் செய்த அட்டூழியங்களை அதட்டிக் கேட்டவர்கள்தாம் ஞாநி.. அந்தச் சிங்கள இயக்குநரையும் தட்டிக்கேட்டவர்கள். அவர்களில் ஒருவர்தான் சுப.வீ. அவரை மட்டும் தனிமைப் படுத்தி.. அவரைத் தலித்துகளுக்கு எதிரானவராகக் காட்டி…
“மொழியால்… இனத்தால் நம்மவரான விடுதலைப்புலிகள்” என்று.. எமது மொழிக்குள்… எமது இனத்திற்குள் உள் நுழைய.. உள் பதுங்க வருகிற உங்கள் சூழ்ச்சியை.. என்னவென்று சொல்வது?!
மொழியால் எப்படி நீ
தமிழனாவாய்?
இனத்தால் எப்படி நீ
தமிழனாவாய்?
‘நம்மவர்’ என்கிற சொல்லாடலுக்குள்
தமிழர்களாகிய எங்கள் பெயர்கள் அடங்கலாம். ஞாநி என்கிற உன் பெயர் எப்படி அடங்கும்.
நீ யார்…
எங்கள் தமிழர்களை எழுப்பிவிட
நாங்கள் படாதபாடு
பட்டுக்கொண்டிருக்கையில்…
எழுகிற தமிழர்களை இடறிவிட
முயற்சி செய்கிற.. நீ யார்?
பச்சைப் பார்ப்பான்!
அப்புறம் எப்படி…நீ…தமிழன் பட்டியலில்.. சேர முடியும்? ‘நம்மவர்’ என்ற சொல்லாடலுக்குள் நுழைய முடியும்?
ஒரே ஒரு இரட்டை டம்ளர் டீக்கடையையாவது… என்று கேட்டிருக்கிறீர்களே ஞாநி! பல இரட்டை டம்ளர் டீக்கடைகளை அடித்து நொறுக்கி.. ஆதிக்க சாதித் திமிரை ஓடஓட விரட்டிய எம் பெரியார் பிள்ளைகள் தாமய்யா அங்கு வந்து… எங்கள் இனவரலாற்றை இப்படி இழிவு செய்யலாமா என்று எதிர்த்துக் கேட்டது! தனித்த சுப.வீ மட்டும் இல்லை.
சிறுபான்மை பிரிவினரைக் குறித்து ரொம்பவும் அக்கறையாக கவலைப்பட்டு இருக்கிறீர்கள். அந்தச் சிறுபான்மை பிரிவில் பிறந்து மிகச் சிறந்த இடத்திற்கு வந்த அய்யா அப்துல் கலாம் பற்றி எவ்வளவு கேவலமாக எவ்வளவு இழிவாக நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் என்பதை மறுக்க முடியுமா ஞாநி!
“மாற்றாக தம்பி சீமானுடன் சேர்ந்து பதில் படம் எடுங்கள்….” எவ்வளவு எளிதாக எழுதிவிட்டீர்கள் ஞாநி!
“காற்றுக்கென்ன வேலி” எடுத்த தம்பி புகழேந்தி பட்டபாடு தெரியாதா ஞாநி!
இந்தச் சிங்கள இயக்குநருக்காக இவ்வளவு வரிந்து கட்டிக்கொண்டு வருகிற உங்களை… அன்றைய பட்டினிப் போராட்டங்களில் எல்லாம் எங்களால் பார்க்க முடியவில்லையே ஞாநி!
ஈழப் பிரச்சனை குறித்துத் திரிபுபடுத்தித் திரைப்படமெடுத்த பார்ப்பன இயக்குநருக்கு தேசிய விருது. அதை குறித்து வெறும் மேடையில் பேசிய தமிழர்களுக்கு 19 மாத பொடா சிறை தண்டனை…
அந்தத் தண்டனையை அனுபவித்தவர்களில் சுப.வீ-யும் ஒருவர். அவரைப் போய் அதே போல கொதிக்காதது ஏன் என்று எகத்தாளமாக கேள்வி கேட்கிறீர்கள்? எத்தனை முறை சுப.வீ சிறைக்குச் சென்றுள்ளார். எந்தெந்தப் பிரச்சனைகளுக்காகச் சிறைக்குச் சென்றுள்ளார் என்கிற பட்டியலை வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறோம் ஞாநி! அவரைப் போய் கொதிக்காத ஆள் என்று கொழுப்பாக எழுதுதல் பிழையில்லையா ஞாநி!
பொடா கொடுமை பற்றி சுப.வீ எழுதிய வலி சுமந்த தொடரை.. தொடரவிடாமல் தடுத்த நீங்களா ஞாநி, கருத்துரிமை பற்றி பேசுவது?
“என் கருத்துகளை… எல்லோரும் பயன்படுத்தலாம், குமுதம் குழுமம் மட்டும் பயன்படுத்தக் கூடாது” என்று கூறிய நீங்களா ஞாநி, கருத்துரிமை பற்றி பேசுவது?
“பத்திரிகையில்,தொலைக்காட்சியில்,ஊடகங்களில், அவ்வளவு ஏன் உங்கள் சகோதரர் எஸ்.பி.முத்துராமன் உட்பட, தமிழ்த்திரைப்படப் படைப்பாளிகள் சினிமாவில் சொல்லாமல்விட்ட பெண்ணடிமைக் கருத்துகள் ஏதும் மீதம் இருக்க முடியாதே!” என்று எழுதியுள்ளீர்களே ஞாநி!
தாங்கள்.. தங்கள் முற்போக்கான கருத்துகளைத் தங்கள் வலைத்தளத்தில் எழுதுவது, ‘தீம்தரிகிட’ என்கிற தங்களுக்கான இதழில் மட்டுமே எழுதுவது என்ற பத்தியத்தோடுதான் இருக்கிறீர்களா ஞாநி!
நன்றி ஞாநி..
எந்தச் சூழ்நிலையிலும்..
நாம் கருத்துக்குக் கருத்து வைத்து..
தெளிவுகளை நோக்கி
விவாதிப்போம்… மற்றபடி உங்கள்மீது எங்களுக்கு எவ்வித வன்மமும் இல்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக.. உங்களை உழைக்கவிடாமல் உட்காரவைத்துச் சோறு போட்ட.. போடுகிற.. சமூகம் தமிழ்ச் சமூகம். அந்தச் சமூகத்திற்கு சிறிதும் நன்றியில்லாமல் நீங்கள் செய்கிற இந்த ஈனக் காரியங்கள் குறித்து உங்களுக்கு வெட்கமே இல்லாமல் போயிற்றே! அது தான் ஞாநி வருத்தமாக இருக்கிறது!
சிங்கள இயக்குநருகாக வன்முறை என்று வரிந்து கட்டிக்கொண்டு வருகிற நீங்கள்…
தில்லை நடராசர் கோயிலில்.. ஆறுமுக சுவாமி அவர்களை, தீட்சிதர்கள் அடித்து நொறுக்கிய போது.. வன்முறை என்று வாயைத் திறக்கவில்லையே.. ஏன் ஞாநி?
கடைசியாக சொல்லிக் கொள்வது இது தான் ஞாநி!
எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் !
இல்லை.. இல்லை…
அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம்.
நீங்கள்.. உங்கள் சாத்திரப்படியே மாட்டி விட்டுக் கொள்ளுங்கள் ஞாநி!
எங்களால் முடியாது!
நன்றிகளுடன்….
அறிவுமதி
சென்னை
08-ஏப்ரல்-2008
நன்றி : உலகத் தமிழ் மக்கள் அரங்கம்
உண்மைதான், கடந்த சில மாதங்களாக ஞாநியிடம் பிராமீனிசம் தலை தூக்கிவருவது சற்று சந்தேகத்தை ஏற்படுகிறது. நான் கேள்வி பட்ட வரை அவர் 40,000 ரூபாய் சம்பளத்தில் ஜெயா டிவி யில் சேர்ந்து விட்டார். அதனால் தான் சுப.வீ-மேல் இந்த கடுப்பு
உண்மைதான், கடந்த சில மாதங்களாக ஞாநியிடம் பிராமீனிசம் தலை தூக்கி வருவது சற்று சந்தேகத்தை ஏற்படுகிறது. நான் கேள்வி பட்டவரை அவர் 40,000 ரூபாய் சம்பளத்தில் ஜெயா டிவி யில் சேர்ந்து விட்டார். அதனால் தான் சுப.வீ-மேல் இந்த’கடுப்பு’
Anbulla Arivumathi,
Simply superb.Showing the real colour of Mr.Gyani
Martin
நாடறிந்த கவிஞருக்கு,
வணக்கம் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.
கற்றுக் கொண்டேன் கவிதையை,
என சொல்லிக்கொள்ள மனமில்லாமல்,
உங்கள் வாசல் தேடி வந்த மாணவன் நான்,
என் கவிதை பக்கங்களை வாசித்து
ஒருவரி வரைந்து செல்லுங்களேன்.
http://thottarayaswamy.tamilblogs.com
ஆவளுடன்,
தொட்டராயசுவாமி.அ
பொய்யான புராணங்கள் எழுதி ஒரு சமுதாயத்தையே ஏமாற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயிறு வளர்த்தவர்களிடம் இதைத்தான் எதிர்ப்பார்க்க முடியும்.
வணக்கம் அறிவுமதி அண்ணா!
உங்களுடைய வலைபதிற்க்கு இன்றுதான் முதல்முதலாய் வருகின்றேன்…
இந்த வலைபதினினூடே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி…..
திருமாவளவன் -ஞாநி உரையாடலை பார்க்கும்போதே எனக்கு தோன்றியது….
கருத்துசுதந்திரம் என்ற ஒன்றைப் பிடித்திக்கொண்டு இவர் வருவது தமது தமிழின விரோத்தை காட்டவே!!
மனிதநேயத்திற்க்காகவும், கருத்துரிமைக்கும் போராடுபவராக இருந்தால் இவரோடு சேர்ந்து நாமும் போராடலாம்………..பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் போராடுபராக இவர் இருக்கும்பட்சத்தில்…..
சீமான் அண்ணனுக்கு இதுபோல் வலைத்தளம் இருந்தால் எனக்கு தெறியப்படுத்தவும்…..
அன்புடன்
அருள்
அன்புள்ள அறிவுமதி,
வணக்கம்.
இன்றுதான் அன்புள்ள ஞாநிக்கு…… அறிவுமதி….. என்ற பதிவைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சிறப்பான, தேவையான, தெரிவிக்க வேண்டிய கருத்தமைந்த பதிவு.
தமிழ்ப்பணி, சமுதாய முன்னேற்றப் பணி தொடரட்டும்.
நலம் நிறைக.
நல்வாழ்த்துகள்.
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
ஹூஸ்டன்
மே 24, 2008
Karuthurimai kuriththu vaai & ____________ kizhiya pesum nee edharkaaga comments moderation vaithirukkiraai? Unnai pondrae ellarum ketta vaarathaigalai eduthu vittaal enna seyvadhu endra bayamaa?
என்ன கேள்வி எழுப்பினாலும் அதற்கு தகுந்த வகையில் திரித்து பதில் எழுதும் அந்த பார்ப்பனப் பன்னாடை…அவனுக்கு அவனைத் தவிர அனைவரும் முட்டாள்கள் எனும் நினைப்பு மிகையாகவே உள்ளது. என்னதான் பார்ப்புகள் பூணூலை மறைத்து வேவுபார்த்தாலும், சமயங்களில் அதுவாகவே வெளிவந்து ஊர்பார்க்க் கைகொட்டி சிரிக்கும்…
அவனுக்கு பணம் கொடுத்து எழுதச் சொல்லுகிற ஆண்டைகளளாளுகின்ற ஊடங்கங்கள் இருக்கும்வரை அவனும் இதுபோன்ற முட்டாள்தனமாக சிந்தைகளை வெளிக்காட்டிக் கொண்டுதானிருப்பான். இதுபோன்ற ஆட்கள் எழுதவேண்டும் இன்னும் அதிகமாக…அவனது உள்மன விகாரங்களை வெளிக்காட்ட…
வேண்டும் இன்னும் பல போனியாகாத ஞாநிகள்…
நாடறிந்த கவிஞருக்கு,
வணக்கம் !
என் கவிதை பக்கங்களை வாசித்து
ஒருவரி வரைந்து செல்லுங்களேன்.
http://thottarayaswamy.net
ஆவளுடன்,
தொட்டராயசுவாமி.அ
ஒரு ஞாநி அடையாளம் காட்டப்பட்டு விட்டார்,
இன்னும் எத்தனை எத்தனையோ …
Vaza vaitha thamiznattai vayara vazthivittar gnani……..
Eninum thandikkum pazakkam Thamilanukku Illai…..
Mannithu Vidugirom.. Thirithikkollungal…… Ellayel.,,,,,
Manamilandu Vazvathil Payane Illai……..