நீரோட்டம்!
—-அறிவுமதி—-
கர்நாடகாவிலும்
இந்து!தமிழ் நாட்டிலும்
இந்து!
இந்து!தமிழ் நாட்டிலும்
இந்து!
இந்துக்கு இந்து
குடிநீர் தரமாட்டாயா
இதுதானா இந்துத்துவா
உங்கள்
தேசிய
நீரோட்டம்!
நல்லா சொன்னீங்க அய்யா. பிரிவுகளில் ஒன்றாக இருந்தாலும் உட்பிரிவுகளால் சண்டைப் போட்டுக்கொண்டே இருந்தார், கடைசியில் இது எங்கு தான் போகும். இவர்களுக்கு எல்லாம் இந்தியன் என்னும் உணர்வு எப்போது வரும்? கிரிக்கெட் பார்க்கும் போது மட்டும் தானா?
நீர் தர மறுக்கும் சக இந்தியனை, சிந்திக்க வைக்கட்டும் உங்கள் எழுத்து!!
வணக்கம் அண்ணே,
1988-ல் வாணியம்பாடியில் ஒரு கவி இராத்திரியில் முதல் முறையாக உங்களை சந்தித்தேன், மீரா அவர்களின் கவிதைகளை அறிமுகப் படுத்தினீர்கள். அண்ணாமலையில் அறிவியல் முதுகலை பயிலும் போது உங்களை பற்றி நிறைய தெரிந்துக்கொண்டேன். சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி-இன்று அமெரிக்க வாழ்க்கை. தற்போது தான் என்னுடைய கவிதைகளை http://sibyappa@blogspot.com என்ற வலைத்தளத்தில் பதித்திருக்கிறேன். sibyappa என்று google-ல் தேடிப்பிடிக்கலாம். தயவு செய்து என் கவிதைகளைப் படித்து தங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
நன்றி வணக்கம்
சிபி அப்பா.
ஆங்கில புழுக்கத்தில் இருக்கிறோம், தமிழ்காற்று வந்திருக்கிறது, வரவு நல்வரவாகட்டும் – நாகூர் இஸ்மாயில்
எப்போது மேடையேறினாலும்
வெற்றிக் கோப்பையை
வலுக்கட்டாயமாய்
இழுத்துச் செல்கிறது
கர்”நாடகம்”
கழுத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் வரை
தமிழ் நாடு – வேறும்
செம்மரி ஆடு.
You dont accept all those whose mother tongue is tamil as tamilians. You are not a liberal
person. They follow one type of chavunism of one kind, you follow another type. Only the type varies.