—–அறிவுமதி—–
.
மொன்னைத் தமிழனே!
முதலில் அன்னைத்
தமிழை
அறவே
மற! மற!
பிழைக்க வேண்டுமா?
ஆங்கிலம்கற்றுக் கொள்!
அது போதுமா என்றா
கேட்கிறாய்!
போதும்!
போதும்!
அது மட்டும்
போதும்!
ஆனால்
உயிர்
பிழைக்க வேண்டுமா?
மும்பை என்றால்
மராத்தி
கற்றுக் கொள்!
கர்நாடகம் என்றால்
கன்னடம்
கற்றுக் கொள்!
கொழும்பு என்றால்
சிங்களம்
கற்றுக் கொள்!
கர்நாடக பந்த்: தமிழ் சங்கம் ஆதரவு
மேலும் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை எதிர்த்து கன்னட ரக்ஷன வேதிகே வரும் 10ம் தேதி அறிவித்துள்ள மாநிலம் தழுவிய கர்நாடகா பந்த்துக்கு பெங்களூர் தமிழ்ச் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
பந்த்துக்கு ஆதரவு தருவதாகவும், அதேசமயத்தில் தமிழக பஸ்களை, லாரிகளை, வாகனங்களை போராட்டம் என்ற பெயரில் மறிப்பதையும், தாக்குவதையும் கைவிட வேண்டும் என்று சண்முகசுந்தரம் கூறினார்.
பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் பேசுகையில், பெங்களூரில் உள்ள தமிழர்கள் வீடுகளில் தமிழ் பேசினாலும் கூட உள்ளத்தளவில் கன்னடர்கள்தான். நாங்கள் கன்னடர்களின் உடன் பிறந்த சகோதரர்கள். எங்களால் இதுவரை கன்னடர்களுக்கு எந்தத் தொந்தரவும் ஏற்பட்டதில்லை.
கர்நாடகம் என்றால்
கன்னடம்
கற்றுக் கொள்! / நானும் கன்னடன்தான் எனச் சொல்லிக்கொள்! என்பது போன்ற வரிகளையும் இணைக்க வேண்டிய நிலை தமிழனுக்கு. இந்திய அளவில் எந்த இரு இனத்தவரிடையே மோதல் எழுந்தாலும் கொம்புசீவி விட்டு, சண்டையை வளர்த்துவிட்டு தனது ஆதிக்கத்தை – சுரண்டலை தொடர்ந்து நடத்தும் இந்திய தேசியத்தை உடைக்க வேண்டும். இந்திய தேசியத்தை தூக்கிப்பிடிக்கும் பார்ப்பனர்களையும், பார்ப்பன மதத்தையும் அழிக்கவேண்டும். தமிழ்நாட்டுத் தமிழனுக்கு மட்டுமல்ல. ஈழத்தமிழனுக்கும், உலகிலுள்ள அனைத்துப்பகுதித் தமிழனுக்கும் அன்றுதான் விடிவு.
//மொன்னைத் தமிழனே!
முதலில் அன்னைத்
தமிழை
அறவே
மற! மற!//
தமிழ் இன்னும்
அன்னைத் தமிழ் தான்
நமது
அன்னையர்
வாயில் மட்டுமே உலவும் தமிழ்.